Ad

Block Deals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Block Deals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஆகஸ்ட், 2024

நிலசரிவால் பாதிக்கப்பட்ட NHPC, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு LNG ஆர்டர்


ப்ரோமோட்டர் பங்குகளை அடகு வைத்தல் (Share Pledge)


Apollo Micro Systems :
இந்நிறுவனத்தின் ப்ரோமோட்டர் கருணாகர் ரெட்டி படாம் (Karunakar Reddy Baddam)  30 லட்சம் எண்ணிக்கையிலான பங்குகளை Aug 16ம் தேதி Pledge செய்துள்ளார்.

இன்றைய BLOCK DEALS :

HG INFRA ENGINEERING :

Grisspal Singh family trust (கிரிஸ்பல் சிங் பேமிலி டிரஸ்ட்) 6 லட்சத்து 8 ஆயிரம் சேர்களை, ஒரு பங்கின் விலை 1566.5₹/Per Share என்ற அடிப்படையில் விற்பனை செய்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து விஜேந்திர சிங் பேமிலி ட்ரெஸ்டும் (Vijendra Singh family trust) 5 லட்சத்து 82 ஆயிரம் பங்குகளை ஒரு பங்கின் விலை 1566.5₹/Per Share என்ற அடிப்படையில் விற்பனை செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து 11 லட்சத்து 90 ஆயிரம் ஷேர்களை விற்பனை செய்துள்ளனர். அதனை,

ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் 4,87,000 பங்குகளையும், டாடா மியூச்சுவல் ஃபண்ட் 4,78,000 பங்குகளையும், iti மியூச்சுவல் ஃபண்ட் 2 லட்சத்து 60 ஆயிரம் பங்குகளையும் வாங்கியுள்ளது. இம்மூன்று நிறுவனங்களும் ஒரு பங்கின் விலை 1566.50₹ என்ற விலையில் வாங்கியுள்ளன.

Krishna institute of medical science :

India Advantage Fund S4-1 (இந்தியா அட்வாண்டேஜ் ஃபண்ட் எஸ்4.1) 7 லட்சத்து 13 ஆயிரம் பங்குகளையும், Dynamic India Fund S4 (டைனமிக் இந்தியா ஃபண்ட் எஸ்4) 62 ஆயிரம் பங்குகளையும் விற்பனை செய்துள்ளது. ஒரு பங்கின் விலை 2373.30₹ ஆகும். 
இதேசமயம், SBI லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி ஒரு பங்கின் விலை 2373.30₹ என்று 7 லட்சத்து 75 ஆயிரம் பங்குகளை வாங்கியுள்ளது.

ADF FOODS : 

இன்பினிட்டி ஹோல்டிங்ஸ் 44 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை 227.51₹ என்று விற்றது. அதேசமயம், இன்பினிட்டி போர்ட்ஃபோலியோ வானது அதே 44 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை 227.51₹ என்று வாங்கியது.

இன்றைய BULK DEALS :

Zomato : 
Antfin Singapore Holdings pte, 18 கோடியே 54 லட்சம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 257.46₹ என்று விற்பனை செய்துள்ளது.

Prataap Snacks :

ராஜேஷ் குமார் மேதா 1 லட்சத்து 47 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 865.42₹ என்று விற்பனை செய்துள்ளார்.

Hinduja Global Solutions:
ரிலையன்ஸ் வேல்யு சர்விஸ் ஆனது, 2 லட்சத்து 36 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 730.36₹ என விற்பனை செய்துள்ளது.

Insider Trades :

Info Edge India :
புரோமோட்டர் endeavour holding trust 10 ஆயிரத்து 500 பங்குகளையும், மற்றொரு புரோமோட்டர் ஆன, Hitesh Oberoi 14 ஆயிரத்து 245 பங்குகளையும் Aug 19ம் தேதி விற்பனை செய்துள்ளனர்.

இன்று டிவிடெண்ட் க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• Gateway Distriparks
• ITD Cementation India
• Engineers India
• Snowman Logistics 
• Symphony 
• Pfizer 
• Credo Brands Marketing 
• LINC
• KPI Green Energy 
• India Glyols
• HAL

இன்று AGM க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• ITD Cementation india
• HAL
• Ujra Global
• India Glyols
• PCBL
• Isgec Heavy Engineering 

இன்று BuyBack க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• Symphony 

இன்று Short Term Additional Surveylence க்குள் நுழையும் பங்குகள் :

• GRM Overseas 
• Jeena Sikho Lifecare
• PCBL
• Sterling Tools
• UFLEX


இன்று Short Term Additional Surveylence இல் இருந்து வெளிவரும் பங்குகள் :

• Century Enka
• Fusion Micro Finance 

இன்றைய முக்கியமான பங்குசந்தை செய்திகள் :

Cyient DLM : 

இந்நிறுவனத்தின் புரமோட்டர் தன்னுடைய ஹோல்டிங் ல இருந்து 14.5% பங்குகளை or 1 கோடியே 15 லட்சம் எண்ணிக்கையிலான பங்குகளை ஒரு Block Deal மூலமாக இன்று (21.08.24) விற்பனை செய்துள்ளார்.
இந்த விற்பனையில் ஒரு பங்கின் விலை 748.65₹ ஆகும். இந்த பிளாக் டீலின் மதிப்பு 860.9₹ கோடியாகும். இந்த விற்பனைக்கு பிறகு, புரமோட்டரிடம் இருந்த பங்குகளின் அளவானது 66.66% இல் இருந்து 52.16% மாக குறைந்துள்ளது.

PNB Housing Finance:
ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் ஃபண்ட், சுமார் 5.1% பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்றதாக CNBC தரவுகள் கூறுகிறது. இந்த பிளாக் டீல் இல் ஒரு பங்கின் விலையானது 775₹ எனவும், இதன் மொத்த மதிப்பானது 1032.7 கோடியாகவும் உள்ளது.

GE T&D India:
புரமோட்டர் குரூப் GE Grid Alliance BV and Grid Equipments தங்களிடம் உள்ள ஷேர் ஹோல்டிங் ஐ மறு ஆய்வு / மறு மதிப்பீடு செய்ய உள்ளனர். இதனால் குறைவான பங்குகளை விற்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Genus Power Infrastructure:
இதன் துணை நிறுவனமானது, 3608.52 கோடி மதிப்பிலான ஆர்டரை AMISP ( Advanced Metering infrastructure  Service Providers) இடம் இருந்து பெற்றுள்ளது. 

TATA Chemicals:

SES ESG Research  நிறுவனம், Tata Chemicals க்கு Environmental, Social and Governance ( ESG) Score  69.4 (B Grade) என கூறியுள்ளது.
இது FY24 இல் Public Domain இல் உள்ள தரவுகளின் அடிப்படையில், தானாகவே SES EGS நிறுவனம் கொடுத்த மதிப்பாகும்.

Exide Industries:

Exide  Energy Solution (எக்ஸைட் எனர்ஜி சொலியுசன்) என்ற துணை நிறுவனத்தில் 75கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், அது Rights மூலமாக நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

2652.24 கோடி ரூபாய் இந்த துணை நிறுவனத்தின் மொத்த மதிப்பு என கூறப்படுகிறது. இந்த முதலீடு / கையகப்படுத்தல் மூலமாக Share Hilding Pattern இல் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

Reliance Industries :

ரிலையன்ஸ் இன் துணை நிறுவனமான ஜியோ கடந்த ஜூன் மாதம் மட்டும் 19 லட்சத்து 11 ஆயிரம்  புதிதாக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்றும், இதுவே கடந்த மே மாதத்தில் 21 லட்சத்து 95 ஆயிரம் புது வாடிக்கையளர்கள் இணைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜூன் மாத முடிவில் ஒட்டு மொத்தமாக 40.71% வாடிக்கையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

Bharti Airtel:

கடந்த ஜூன் மாதம் மட்டும் 12 லட்சத்து 52 ஆயிரம் புதிதாக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்றும், இதுவே கடந்த மே மாதத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் புது வாடிக்கையளர்கள் இணைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜூன் மாத முடிவில் ஒட்டு மொத்தமாக 33.23% வாடிக்கையாளர்களை பெற்று 2ம்  இடத்தில் உள்ளது.

Vodafone Idea :

கடந்த ஜூன் மாதம் மட்டும் 8 லட்சத்து 60 ஆயிரம்  வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர் என்றும், இதுவே கடந்த மே மாதத்தில் 9 லட்சத்து 24 ஆயிரம் வாடிக்கையளர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜூன் மாத முடிவில் ஒட்டு மொத்தமாக 18.56% வாடிக்கையாளர்களை பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

OLA Electric Mobility :

ஒலாவின் 2 புதிய மாடல்களான, S1X 3Kwh, & S1X 4Kwh இவை இரண்டும்,  கனரக தொழிற்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட PLI ( Production Linked Incentive) Scheme இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும்.

 இதனால் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறைக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின்படி தகுதி மதிப்பீட்டுத் தேவைகளுக்கு இணங்குவதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளன.


L&T :

இந்நிறுவனத்திற்கு GST ஆணையத்திடம் இருந்து வந்த Show- Cause ஐ மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. L&T Demerger க்கு முன்
நடந்த பரிவர்த்தனை தொடர்பான GST நோட்டீஸ் அது. ஆனால் ஏற்கனவே அந்த வரியானது செலுத்தப்பட்டுவிட்டது என்று L&T கூறியது.


BGR Energy Systems:

இந்நிறுவனம், ஜார்கண்ட் உர்ஜா சஞ்சரன் நிகாமிடம் (JUSNL Project) இருந்து, Sarath, சுந்தர்நகர் மற்றும் சட்டர்பூர் ஆகிய இடங்களில் 132/33 KV GIS வழங்கல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் ஆணையிடுதல் தொடர்பான ஒப்பந்தம் முடிவடைந்ததற்கான அறிவிப்பைப் பெற்றது. 

மேலும் இது இந்நிறுவனத்தின் ஏற்கனவே செயல்பாடுகளில் உள்ள நிறுவனத்தின் நிதி, செயல்பாடுகள் அல்லது பிற செயல்பாடுகளில் பொருள் தாக்கம் இல்லை என்றும் கூறப்படுகிறது.


Petronet LNG :

கொழும்பில் உள்ள கெரவலப்பிட்டியில் உள்ள LTL இரட்டை எரிபொருள் மின் நிலையத்திற்கு LNG வழங்குவதற்காக இலங்கையின் LTL ஹோல்டிங்ஸ் (LTL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த LNG சப்ளையானது, பெட்ரோநெட் கொச்சி எல்என்ஜி டெர்மினலில் இருந்து  LNG ISO டேங்க் கன்டெய்னர்கள் மூலமும், மேலும் Multi Model Transport அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், இந்த LNG சப்ளையின் ஆரம்ப காலம் ஐந்து வருடங்களாக இருக்கும், பரஸ்பர ஒப்பந்தத்திற்கு உட்பட்டு நீட்டிக்க முடியும் என்று கூறுகிறது.


NHPC : 

சிக்கிம் இல் உள்ள டீஸ்டா-V மின் நிலையத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. 

இந்த நிலச்சரிவு NHPC 510 MW டீஸ்டா-V மின் நிலையத்தில் (சிக்கிம்), TRT (டெயில் ரேஸ் டன்னல்) கேட் ஹாய்ஸ்ட் அமைப்பு மற்றும் GIS கட்டிடத்தின் ஒரு பகுதியை பாதிதுள்ளதாகவும் மேலும், இந்த அனல்மின் நிலையம் தற்போது செயல்படவில்லை என்றும், அக்டோபர் 2023 இல் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் NHPC கூறியுள்ளது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

Selling Pressure ல் Zomato - 1 கோடியே 70 லட்சம் உஜ்ஜிவன் பங்குகள் விற்பனையானது

இன்றைய Bulk Deals :

DCX Systems : NCBG ஹோல்டிங் கம்பனி 29 லட்சத்து 59 ஆயிரம் DCX Systems பங்குகளை (Share) ரூ 337.95₹ / Per Share என்ற விலையில்  விற்பனை செய்துள்ளது. இதில், 7 லட்சத்து 39 ஆயிரம் பங்குகளை Neomile Growth Fund Series I ம், Upadhyaya Ajay Shiv Narayan 15 லட்சம் பங்குகளையும் ரூ 337.95₹ / Per Share என்ற விலையில் வாங்கியுள்ளனர்.

Prudent Corporate Advisory Services:

ராமேஷ்சந்திர சிமன்லால் ஷா, Prudent Corporate Advisory Services இன் 6 லட்சத்து 12 ஆயிரம் பங்குகளையும், இதேபோல்,  சஞ்சய் ரமேஷ்சந்திர ஷா, 4 லட்சத்து 12 ஆயிரம் Prudent Corporate Advisory Services பங்குகளையும் ரூ 2450₹ / Per share என்ற விலையில் விற்பனை செய்துள்ளனர். இதில், 2லட்சத்து 75 ஆயிரம் பங்குகளை, சொசைட்டி ஜெனரல் நிறுவனம் ரூ 2450₹ / Per Share என்ற விலையில் வாங்கியுள்ளனர்.

Ujjivan Small Finance Bank :

Ardisia, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ன் பங்கினை ரூ 41.11 / Per Share என்ற விலையில் 1 கோடியே 70 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

இன்றைய Block Deals:

Ethos :

Bandhan Mutual Fund, Ethos ன் 3 லட்சம் பங்குகளை ரூ 3346₹ / Per Share என்ற விலையில் வாங்கியுள்ளது. இதில்,  Mahen Distribution Ltd 1லட்சத்து 60 ஆயிரம் பங்கையும், Master Capital Services 1 லட்சத்து 40 ஆயிரம் பங்கினையும் ரூ 3346₹ / Per Share என்ற விலையில் விற்பனை செய்துள்ளனர்.

இன்று டிவிடெண்ட் க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• Balkrishna industries 
• IRB Infra
• Titagarh Rail System 
• Dr Lal Path Labs
• The Phoenix Mills
• PI Industries 
• Rain Industries 
• Sun Tv
• Apar Industries 
• AIA Engineering 
• South Indian Bank 
• JK Papper

இன்று AGM க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• Titagarh Rail System 
• Apar Industries 
• South Indian Bank 
• Vodafone India
• JK Paper 
• Saregama India

இன்று BuyBack க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• AIA Engineering 

இன்று Short Term Additional Surveylence இல் இருந்து வெளிவரும் பங்குகள் :

• Mukka Proteins 

Zomato:

அலிபாபா குழுமத்தின் ஒரு பிரிவான Antfin Singapore Holdings, சொமாட்டோவில் 1.54% பங்குகளை சுமார் 408 மில்லியன் டாலர் மதிப்பிலான பிளாக் டீல்கள் மூலம் ஆஃப்லோட் செய்ய திட்டமிட்டுள்ளது.
 CNBC TV இன் தரவுகளின் படி, ஒரு பங்கின் விலை 251.68 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ஃபின் இன் ஜூன் 2024 நிலவரப்படி Zomatoவில் 4.3% பங்குகளை வைத்திருந்தது என்பது. குறிப்பிடத்தக்கது.

Poly Medicure : 

இந் நிறுவனம், ஆகஸ்ட் 19ம் தேதி QIP (Qualified Institutional Placement) ன் வழியாக சுமார் 1000கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஒரு பங்கின் விலை 1880.69 ரூபாய் என்ற விலையில்  பங்குகளை விற்று நிதி திரட்டியதாக CNBC TV இன் தரவுகள் கூறுகிறது. இவ்வாறு வரும் நிதியினை, நிறுவனத்தின் உற்பத்திக்கான வசதிகள், General Corporate Purpose, Inorganic Initiatives போன்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.

HCL Technologies: 

இந்நிறுவனத்தின் CFO (Chief Financial Officer) ஆக இருந்த, பிரதீக் அகரவால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து,
 சிவ் வாலியா (Shiv Walia) வை CFO வாக நியமிக்க HCL Tech Bord ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 6 ஆம் தேதியில் இருந்து அவர், நிறுவனத்தின் CFO வாக செயல்படுவார்.

MRO - TECH REALITY:

இந் நிறுவனத்தின் CFO ( Chief Financial Officer) ரங்கராஜன் கோபாலகிருஷ்ணன், தன் Health Concern காரணமாக  பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இது ஆகஸ்ட் 19 ல் இருந்து நடைமுறைக்கு வரும்.


Hindustan Zinc :

OFS (Offer For Sale) வழியாக தன்னிடம் இருந்த பங்குகளில், 1.51% பங்குகளை விற்றது போக 
மீதம் தன்னிடம் இன்னும் Hindustan Zinc ல் 63.42% பங்குகள் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nucleus Software Exports :

ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும்  போர்ட் மீட்டிங்கில் 
பங்குகளை திரும்பப் பெறுவது (Buy Back) தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Motilal Oswal Financial Services: 

இந்நிறுவனத்தின் போர்ட், NCD (Non Convertible Debentures) வழியாக 100 கோடி ரூபாய் நிதியும்,
 அதிகப்படியான விருப்பத்தின் பேரில் மேலும் 100 கோடி ரூபாய் என மொத்தம் 200கோடி அளவிலான நிதி திரட்ட BOARD ஒப்புதல் அளித்துள்ளது.

INDUS IND BANK :

இண்டஸ் இந்த் பேங்கிற்க்கு RBI (Reserve Bank Of India) ஒரு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது,
Asset Management Business க்காக தனி ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம், மியுட்சுவல் ஃபண்ட், பங்கு வணிகம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.

Hi Tech Pipes :

இந்நிறுவனத்தின் Board, 600 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
 திரட்டப்படும் நிதியானது, QIP (Qualified Institutional Placement), OFS(Offer For Sale), FOPO(Follow On Public Offer), Rights Issue போன்ற வழிகளில் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

Sequent Scientific:

இந்நிறுவனத்தின் Albendazole என்னும் API(Active Pharmaceutical ingredient) க்கு WHO (World Health Organization)
உலக சுகாதார அமைப்பிடம்  இருந்து PQ(Pre Qualification) ஒப்புதல் கிடைத்துள்ளது. Mepro Pharmaceutical உம், Sequent Scientific உம் Partnership ல் இது கிடைத்துள்ளது.

ரிலையன்ஸ் இன் Jio financial லில் நடந்த... Zydus க்கு FDA விடம் இருந்து... போனஸ் கொடுக்கும் NBCC...

JIO FINANCIAL SERVICES: இதன் துணை நிறுவனமான Jio Leasing Services ஆனது, சுமார் 67 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு, ரிலையன்ஸ் இன்டர்நேஷன...