Ad

P&G லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P&G லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

Paytm பிசினஸை வாங்கிய Zomato, PNB Housing நடந்த Block Deal, Kalyan Jewellers, BEML, INDI Grid, P&G,....


இன்றைய Block Deals :

PNB Housing Finance:

General Atlantic Singapore fund 1 கோடியே 33 லட்சம் பங்குகளையும் Pioneer investment fund 6 லட்சத்து 23 ஆயிரம் பங்குகளையும் விற்பனை செய்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட பங்கின் விலை 802.5₹ / per share.

இதனை, While the Govt of Singapore 36 லட்சத்து 45ஆயிரம் பங்குகளையும், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃபண்ட் 18 லட்சத்து 69 ஆயிரம் பங்குகளையும், HSBC மியூட்சுவல் ஃபண்ட் 8 லட்சத்து 9 ஆயிரம் பங்குகளையும், மார்கன் ஸ்டன்லி ஆசியா சிங்கப்பூர் pte 2 லட்சத்து 49 ஆயிரம் பங்குகளையும் வாங்கியுள்ளது. ஒரு பங்கின் விலை 802.50₹ / Per Share.

இன்றைய Bulk Deals :

Cyient DLM :

சியெண்ட் 1 கோடியே 14 லட்சம் பங்குகளை ஒரு பங்கின் விலை 764.40₹ என்ற விலையில் விற்றது. இதனை,

மார்கன் ஸ்டன்லி ஆசியா சிங்கப்பூர் pte 41 லட்சத்து 37 ஆயிரம் பங்குகளையும், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃபண்ட் 19 லட்சத்து 79 ஆயிரம் பங்குகளையும், நிப்பான் இந்தியா மியுட்சுவல் ஃபண்ட் 13 லட்சத்து 20 ஆயிரம் பங்குகளையும், HDFC மியுட்சுவல் ஃபண்ட் 11 லட்சத்து 35 ஆயிரம் பங்குகளையும், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட் மொரிஷியஸ் pvt ltd 5 லட்சத்து 4 ஆயிரம் பங்குகளையும், Edelweiss Mutual Funds 4 லட்சத்து 10 ஆயிரம் பங்குகளையும் வாங்கியுள்ளது. ஒரு பங்கின் விலையானது 764.40₹ ஆகும்.

Trent :

டோடோனா ஹோல்டிங் (Dodona Holding) 2 லட்சத்து 46 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 6790₹ என விற்பனை செய்தது. இதனை,

சித்தார்த்த யோக் (siddhartha yog) அதே  2 லட்சத்து 46 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 6790₹ என வாங்கியுள்ளார்.

Kiri Industries:

கிரிஃபின் குரோத் ஃபண்ட் (griffin  Growth Fund) 40 லட்சத்து 98 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 373.85₹ என வாங்கியுள்ளது. இதனை,

லோட்டஸ் இன்வெஸ்ட்மென்ட் ltd 40 லட்சத்து 98 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 373.85₹ என விற்றுள்ளது.

Delhivery :

Nexus Venture 78 லட்சத்து 19 ஆயிரம் பங்குகளை, ஒரு பங்கின் விலை 440₹ / Per Share என விற்றுள்ளது.

Navuma Wealth Management :

Rashesh Chandrakant 4 லட்சம் பங்குகளை 6204 / Per Share என விற்றுள்ளது.

Insider Trades :

Man Infra Construction :  


புரமோட்டர் Mansi P.Shah 50 ஆயிரம் பங்குகளை ஆகஸ்ட் 20ம் தேதி வாங்கியுள்ளார்.

Info Edge india:  


புரமோட்டர் Hitesh Oberoi 40ஆயிரத்து 60 பங்குகளையும், மற்றொரு புரமோட்டர் ஆன, Endeavour holding Trust 38 ஆயிரத்து 973 பங்குகளையும் ஆகஸ்ட் 20ம் தேதி விற்பனை செய்துள்ளனர்.

Prataap Snacks : 

புரமோட்டர் Rajesh Kumar Metha மற்றும், Arvind Kumar Metha தாங்கள் வசம் உள்ள பங்குகளை ஆகஸ்ட் 19ம் தேதி விற்பனை செய்துள்ளனர்.

Price Band 20% இல் இருந்து 10% மாக மாறிய பங்குகள் :

• Tasty Bite Eatables

இன்று டிவிடெண்ட் க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• IRFC
• Jindal Steel and Power 
• Aster DM Health care
• Globus Spirits 
• Goldiam International 
• Relaxo Footwears
• Sirca Paints
• Hester Biosciences 

இன்று AGM க்கான Ex / Record Date கொண்ட பங்குகள் :

• Aster DM Health care
• Globus Spirits 
• Sirca Paints
• Hester Biosciences 
• Expleo Solution 
• Honosa Consumer 

இன்று Short Term Additional Surveylence க்குள் நுழையும் பங்குகள் :

•Angel One
• Edelweiss Financial Services 
• Godfrey Phillips India
• JG Chemicals
• Tasty Bite Eatables 

இன்று Short Term Additional Surveylence இல் இருந்து வெளிவரும் பங்குகள் :

• Garware Hi Tech Films
• kfin Technologies 
• Sakuma Exports


இன்றைய (22/08/24) பங்குசந்தை முக்கிய செய்திகள் :

Zomato:


Paytm இன் entertainment ticketing business ஐ 2048 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இருப்பினும் இந்த டிக்கெட் புக்கிங் இன்னும் 12 மாதங்களுக்கு paytm app மூலமாகவும் நடைபெறும் என்றும், மேலும் இதன் மூலம், 280 பணியாளர்கள் ஜோமடோ விற்குள் நுழைவார்கள் என்றும் கூறுகின்றனர்.

One 97 Communication ( PAYTM) :


PAYTM இன் Non Executive Indipendent Directors இன் சம்பளத்தை குறைப்பது தொடர்பாக இதன் Board அனுமதி அளித்துள்ளது. இது இப்பொழுது Share Holders இன் அனுமதிக்கு அனுப்பப்படும், அவர்களின் ஒப்புதலுக்கு பின் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இது நடைமுறை படுத்தப்படும் என கூறியுள்ளனர்.

TATA MOTORS:


SES ESG Research நிறுவனம், Tata Motors க்கு Environmental, Social and Governance ( ESG) Score 78.8 (B+ Grade) என கூறியுள்ளது. இது FY 24 தரவுகளின் அடிப்பையில் கொடுக்கப்பட்ட மதிப்பகும்.

Zen Technologies:


இந்நிறுவனம் QIP (Qualified institutional placement) வழியாக 800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று பணம் திரட்ட உள்ளது, சந்தையின் தேவையை பொறுத்து 1000 கோடி ரூபாய் வரை பங்குகளை QIP இல் விற்க முடிவு செய்துள்ளது, ஒரு பங்கின் விலை 1685.18₹ என நிர்ணயம் செய்துள்ளதாக CNBC தரவுகள் கூறுகிறது.

L&T Technology Services:

உலகளாவிய பொறியியல் மற்றும் R&D நிறுவனம் ( The Global Engineering and Research Firm) வாடிக்கையாளர்களுக்கு புதுமையான வணிக மாதிரிகளை வழங்க தேல்ஸுடன் ( Thales) ஒத்துழைத்துள்ளது(Collaboration).

 இந்த Strategic Collaboration (மூலோபாய ஒத்துழைப்பின்) கீழ், L&T டெக்னாலஜி தேல்ஸ் (Thales) சென்டினல் இயங்குதளத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் மென்பொருளை Flexible lisensing Option (நெகிழ்வான உரிம விருப்பங்களுடன்) பணமாக்க உதவும்.

Paras Defence and Space Technologies: 

அகச்சிவப்பு (infrared) அல்லது வெப்ப இமேஜிங் கருவிகள் (Themal Imaging) , மின்-ஒளியியல் அமைப்புகள் ( Electro Optics System), துணை அமைப்புகள் மற்றும் ரேடார் அமைப்புகளின் தளம் உட்பட பல பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்துறை நிறுவனத்தை நிறுவுவதற்கு

 தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) நிறுவனத்திற்கு தொழில்துறை உரிமம் வழங்கியுள்ளது. 

Alken Laboratories:

இந்நிறுவனத்தின் புரமோட்டர் தன்வசமுள்ள பங்குகளில் 0.7% ஐ ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்துள்ளதாக CNBC தரவுகள் கூறுகிறது. இந்த டீலில் ஒரு பங்கின் விலை 5616₹ ஆகும்.

Muthoot Capital Services:

வரும் ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெறும் Board மீட்டிங்கில் 50கோடி ரூபாய் அளவுக்கு நிதியை NCD (Non convertible Debentures) வழியாக திரட்ட ஒப்புதல் அளிக்கப்படும் என்ற கூறப்படுகிறது.

IREDA:

வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் போர்ட் மீட்டிங்கில் 4500₹ கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும், இந்த நிதி திரட்டும் முறையானது, FPO ( Further Public Offer), QIP (Qualified Institutional Placement), Rights Issue, Preferential issue இந்த வழிகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Welspun Enterprises: 

மும்பை புறநகரில் Trench less (அகழி இல்லாத) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித நுழைவுச் சாக்கடைகளை மறுசீரமைப்பதற்காக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) யிடமிருந்து

 Welspun இன் துணை நிறுவனமான மிச்சிகன் இன்ஜினியர்ஸ் ஏற்பு கடிதம் (LOA) பெற்றுள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு ரூ. 159.75 கோடி, மற்றும் இத்திட்டம் தொடங்கும் அறிவிப்பில் இருந்து 24 மாதங்களுக்குள் (பருவமழை தவிர்த்து) செயல்படுத்தப்படும்.

BEML :

பாதுகாப்புக்கான மேம்பட்ட கடல் பயன்பாடுகளை உருவாக்க இந்திய கடற்படையின் கடல் பொறியியல் இயக்குநரகத்துடன் உற்பத்தியாளர் ஒரு மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU - Memorandum of Understanding) கையெழுத்திட்டுள்ளார்.

கூடுதலாக, இந் நிறுவனம் இரயில் மற்றும் மெட்ரோ தீர்வுகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக மலேசியாவின் மிகப்பெரிய ரோலிங் ஸ்டாக் உற்பத்தியாளரான SMH ரெயிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

Rail Vijas Nigam :

ஆசியான் சந்தை மற்றும் பிற பிராந்தியங்களில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் சேவை திட்டங்களில் கூட்டாக இணைந்து பணியாற்றுவது தொடர்பாக,

Dhaya Maju Infrastructure (ஆசியா) Sdn Berhad (DMIA) உடன் RVNL ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Kalyan Jewellers India :

Highdell Investment கிட்ட இருந்து கல்யாண் ஜூவல்லர்ஸ் புரமோட்டர் திரிக்கூர் சீதாராம ஐயர் (trikkur sitarama iyer) ஒரு பங்கின் விலை 535₹ வீதம் சுமார் 2.36% பங்கினை வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு 1300 கோடியாகும். இதன் பின்னர், புரமோட்டரிடம் 62.95% பங்குகள் கவசம் இருக்கும்.

Procter & Gamble Health:

ஜூன் 2024 காலாண்டில் லாபம் 43.7% குறைந்து ரூ. 16.78 கோடியாக இருந்தது, ஜூன் 2023 காலாண்டில் ரூ. 29.82 கோடியாக இருந்தது,

20.19 கோடி விதிவிலக்கான (Exceptional loss) இழப்பால் இந்த சரிவு பாதிக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகளின் வருவாய் 5.7% சரிந்து ரூ.283.9 கோடியாக இருந்தது, அதே காலகட்டத்தில் ரூ.301.2 கோடியாக இருந்தது. நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.60 இறுதி ஈவுத்தொகையை (Dividend) அறிவித்தது.

India Grid Trust :
Sponsor Esoteric II pte, 17.32% பங்குகள் OFS (Offer For Sale) வழியாக ஆகஸ்ட் 22, 23 ம் தேதிகளில் விற்பனை செய்ய உள்ளது. ஒரு பங்கின் விலை 132₹ ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்,

பயனுள்ளதாக இருந்தால் FOLLOW செய்யுங்கள், 
உங்கள் சந்தேகங்கள், கருத்துக்களை COMMENT செய்யுங்கள்,

நன்றி, வணக்கம்.

ரிலையன்ஸ் இன் Jio financial லில் நடந்த... Zydus க்கு FDA விடம் இருந்து... போனஸ் கொடுக்கும் NBCC...

JIO FINANCIAL SERVICES: இதன் துணை நிறுவனமான Jio Leasing Services ஆனது, சுமார் 67 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு, ரிலையன்ஸ் இன்டர்நேஷன...